×

மதுரை மாவட்டத்தில் 46,790 வாக்காளர்கள் 80 வயதை கடந்தவர்கள்

மதுரை, மார்ச் 3: மதுரை மாவட்டத்தில் 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 46,790 பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட தொகுதிகளின் மொத்த வாக்காளர்கள் 26,85,671. இதில், ஆண்கள் 13,21,153 பேர். பெண்கள் 13,64,316 பேர். இதர வாக்காளர்கள் 202. இந்த சட்டசபை தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் தபால் ஓட்டு செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆன்லைனில் சான்றிதழ் சமர்ப்பித்து, விண்ணப்பிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் மொத்தம் 37 மாவட்டங்களில் 12,91, 132 பேர், 80 வயதை கடந்தவர்களாக உள்ளனர். இதன்படி மதுரை மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 46,790 பேர் உள்ளனர். திண்டுக்கல்லில் 36,800 பேர், சிவகங்கையில் 28,855 பேர், விருதுநகரில் 28,092 பேர், தேனியில் 22,614 பேர், ராமநாதபுரத்தில் 20,972 பேர் உள்ளனர்.

Tags : Madurai ,
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...