×

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு

 

மயிலம், மே 23: திண்டிவனம் அடுத்த நெய்குப்பி கிராமம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த தினகரன் மனைவி சித்ரா (24). இவர் நேற்று மயிலம் அடுத்த அவ்வையார்குப்பத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு தனியார் பேருந்து மூலம் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பேருந்து கூட்டேரிப்பட்டு நிறுத்தம் அருகே வந்தபோது, சித்ரா தனது கைப்பையில் வைத்திருந்த ஒன்றரை சவரன் தங்க நகை காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தொடர்ந்து பேருந்து முழுவதும் நகையை தேடி உள்ளார். ஆனால் நகை கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் மயிலம் காவல் நிலையத்திற்கு சென்று திருட்டு போன சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை சவரன் நகையை மீட்டு தருமாறு போலீசாரிடம் புகார் அளித்தார். புகார் மனுவை பெற்றுக் கொண்ட மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : Mayilam ,Chitra ,Dinakaran ,Mariamman Koil Street, Neykuppi ,Tindivanam ,Avvaiyarkuppam ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...