×

பூவேந்தியநாதர் கோயிலில் தேசிக சுவாமிகள் தரிசனம்

சாயல்குடி. மார்ச் 3:  சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில், சேலம் திருமுறை சைவநெறி அறக்கட்டளையின் ஆதினம் சாமி தரிசனம் செய்து, பொதுமக்களுக்கு அருளாசி வழங்கினார்.  மாரியூர் பவளநிற வள்ளியம்மன் உடனுரை பூவேந்தியநாதர் கோயிலுக்கு சேலம் திருமுறை சைவ நெறி அறக்கட்டளை ஆதினம் தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் சாமி தரிசனம் செய்ய நேற்று வந்தார். ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம், மாரியூர் பிரதோஷ கமிட்டியாளர்கள் சார்பில் பூரண கும்பம் மரியாதை செய்யப்பட்டது. பூவேந்தியநாதர், பவளநிறவள்ளி அம்மனுக்கு பழங்கள் படைத்து வழிபட்டார். பிறகு சிவப்புராணம், திருப்பதிகம், அபிராமி அந்தாதி பாடப்பட்டது.

பக்தர்களிடம் ஆதினம் பேசும்போது, ராமர் வழிபட்ட கோயில் என்பதால் ராமாயாணம் இதிகாசங்களுடன் தொடர்புடைய கோயிலாக பூவேந்தியநாதர் கோயில் விளங்குகிறது. பதவி, புண்ணியம் வேண், பித்ரு தோசம் நீக்கும் தலமாக உள்ளது. இங்குள்ள தலவிருட்சமாக முன்னைமரம், வன்னிமரம் ஆகியவை சுமார் 5ஆயிரம் வருடத்திற்கு முந்தையதாக உள்ளது. இந்த மரங்களை தொட்டு வணங்கினால் ராமேஸ்வரத்திற்கு சென்று வந்த புண்ணியம் கிடைக்கும், பித்ருதோசம் நீங்கும்.  பிரம்ம கீர்த்தி எனப்படும் மனநிலை சம்மந்தப்பட்டவைகளுக்கு இங்கு வந்து சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்தால் மன அமைதி கிடைக்கும். மனிதனின் மனம் நயம் பட கண்டிப்பாக கோயில்களுக்கு சென்று வழிபட்டு வந்தால் மனம் அமைதி கிடைத்து மனது தெளிவு பெறும். இதனால் தலயாத்திரை அவசியம் கருதி பண்டைய காலங்களில் இது போன்ற கோயில்கள் கட்டப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கடல் பகுதி ஆகும். மலைகள், பாறைகள் கிடையாது. ஆனால் இங்குள்ள ராமேஸ்வரம், திருஉத்திரகோசமங்கை, மாரியூர் போன்ற கோயில்கள் பாறைகளால், கலை நயத்துடன் கட்டப்பட்டுள்ளது, செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் கட்டிடகலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும் கட்டிடங்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு இறைவனின் அருளாசி தான் என்றார்.

Tags : National ,Swamis ,Poovendianathar Temple ,
× RELATED சென்னை – பெங்களூரு தேசிய...