×

நம்புதாளை பகுதியில் குறைந்தழுத்த மின் வினியோகத்தால் இரவு நேரங்களில் தவிக்கும் மக்கள்

தொண்டி, மார்ச் 3:  நம்புதாளை பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளது. போதிய டிரான்ஸ்பார்மர் இல்லாததால் மின் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டு பெரும்பாலான நேரங்கள் குறைந்தழுத்த மின் வினியோகம் செய்யப்படுகிறது. இதை தவிர்க்க நம்புதாளையில் கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நம்புதாளை அதிக மக்கள் தெரகையை கொண்ட ஊராட்சியாகும். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளது. மூன்று டிரான்ஸ்பார்மர்கள் மூலம் மட்டுமே இப்பகுதி முழுவதும் மின் வினியோகம் செய்யப்படுகிறது. அதிகமான மின் இணைப்புகளுக்கு மின் சப்ளை வழங்கப்பட வேண்டும் என்பதால் பெரும்பாலான நேரங்களில் குறிப்பாக இரவு நேரங்களில் குறைந்தழுத்த மின் வினியோகம் செய்யப்படுகிறது. இது பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதனால் நம்புதாளையில் கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து ஆறுமுகம் கூறியது, மின் இணைப்புக்கு ஏற்ப டிரான்ஸ்பார்மர் எண்ணிக்கை இல்லை. அதனால் மின் வினியோகத்தில் குளறுபடி ஏற்படுகிறது.  இரவு நேரத்தில் காலனி, படையாச்சி தெரு, மேலத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தழுத்த மின் சப்ளை மட்டுமே வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் பலன் இல்லை. அதனால் கூடுதலாக டிரான்ஸ்பார்மர் அமைத்தால் அனைத்து பகுதிக்கும் சீரான மின் வினியோகம் கிடைக்கும் என்றார்.

Tags : Namputhalai ,
× RELATED தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட பகுதிகளில்...