கைப்பந்து போட்டி

ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 3:  ஆர்.எஸ்.மங்கலத்தில் நடைபெற்ற மின்னொளி கைப்பந்து போட்டியை டாக்டர் ராஜா முகமது துவங்கி வைத்தார். இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணி வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியில் வெல்லும் அணிக்கு முதல் பரிசாக ரூ.20 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.15 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.10ஆயிரம் என பல்வேறு பரிசுகள் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தன. லீக் சுற்றில் வெற்றி பெரும் அணியே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் முன்னாள் ஜமாத் தலைவர் பசீர் அஹமது, நிர்வாகி அப்துல் ஜபார் உட்பட நிர்வாகிகளும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>