காரைக்குடி-திருச்சி ரயில் மீண்டும் துவக்கம் தொழில் வணிகக் கழகம் வரவேற்பு

காரைக்குடி, மார்ச் 3: கொரோனா நோய் தொற்று காரணமாக சென்ற ஏப்ரல் மாதம் முதல் பாசஞ்சர் ரயில்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது நோய் தொற்று குறைவானதை தொடர்ந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து வரும் 15ம் தேதி முதல் பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி திருச்சியில் இருந்து காரைக்குடி வரை இயக்கப்பட்ட பாசஞ்சர் ரயில் மீண்டும் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் திருச்சியில் இருந்து மாலை 6.15க்கு புறப்பட்டு காரைக்குடிக்கு இரவு 8.5க்கு வரும் மறுநாள் காலை 7 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்டு காலை 9.5க்கு திருச்சி செல்லும். வழக்கமாக ஊர்களில் நின்று செல்லும். முன்பதிவு இல்லை. ஆனால் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளது. திருச்சிக்கு 50, புதுக்கோட்டைக்கு 30. குறைந்தபட்ச கட்டணமாக ரூ.30 வசூல் செய்யப்பட உள்ளது. பாசஞ்சர் ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்புக்கு தொழில் வணிக்கழக தலைவர் சாமிதிராவிடமணி, செயலாளர் கண்ணப்பன் ஆகியோர் வரவேற்றுள்ளனர்

Related Stories:

>