×

திருப்புத்தூரில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு

திருப்புத்தூர், மார்ச் 3: திருப்புத்தூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடைபெற்றது.
திருப்புத்தூர் பேருந்து நிலையத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து செயல்முறை விளக்க பிரச்சாரம் நேற்று நடைபெற்றது. இதில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள விவி இயந்திரத்தின் செயல் முறைகள் குறித்தும், விரிவாக பொதுமக்களிடம் தேர்தல் நடத்தும் அலுவலர் சிந்து விளக்கினார். மேலும் இதில் புதிய வாக்காளர்கள் இந்த இயந்திரத்தின் மூலம் வாக்களித்து செயல் முறைகளை தெரிந்து கொண்டனர். ஏராளமான கல்லூரி மாணவ, மாணவியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திருப்புத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயந்தி, தேர்தல் துணை தாசில்தார் கமலக்கண்ணன், திருப்புத்தூர் வருவாய் ஆய்வாளர் செல்வம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Tiruputhur ,
× RELATED அதிமுக நோட்டீசுடன் பணம் பட்டுவாடா: முதியவர் சிக்கினார்