காரைக்குடி பஸ் நிலையத்தில் வாக்களிக்க விழிப்புணர்வு

காரைக்குடி, மார்ச் 3: காரைக்குடி புதிய பஸ் ஸ்டாண்டில் தாசிந்தார் அந்தோணிராஜ் தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வாக்களிக்கும் முறை மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பது பார்க்கும் வசதி குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவ,மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. வருவாய் ஆய்வாளர் மெகர்அலி, வி.ஏ.ஓ அபினயா, தேர்தல் அலுவலர்கள் பாலகிருஷ்ணன், நகராட்சி தேர்தல் பிரிவு நாகராஜன், கணேசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

தாசில்தார் அந்தோணிராஜ் கூறுகையில், தேர்தலில் வாக்களிப்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வாக்களிக்கும் முறை குறித்து விளக்க இவிஎம் மிஷின் மூலம் பழைய, புதிய பஸ் ஸ்டாண்டு, சந்தை என மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இதற்கு என 10 இவிஎம் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. புதுவயல், கண்டனூர் பேரூராட்சி பகுதிகளில் டெமோ அளிக்கப்பட உள்ளது. கடந்த தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்த இடங்களில் வாக் குசதவீதத்தை அதிகரிக்க முகாம் நடத்தப்பட உள்ளது. கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன என்றார்.

Related Stories:

>