வாக்களிப்பது எப்படி? திருவில்லி.யில் விழிப்புணர்வு பிரசாரம் தீவிரம்

திருவில்லிபுத்தூர், மார்ச் 3:  தமிழக சட்ட மன்ற தேர்தல் அறிவித்த பிறகு திருவில்லிபுத்தூர் தேர்தல் பிரிவு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் அதன் ஒருபகுதியாக திருவில்லிபுத்தூரில் மக்கள் கூடும் இடங்களில் வாக்கு இயந்திரங்களில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதை தெரியப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர் திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பிரிவு உதவி அலுவலர் சரவணன், தேர்தல் பிரிவு தாசில்தார் வடிவேலு ஆகியோர் உத்தரவின்பேரில் நகர் வருவாய் ஆய்வாளர் அனந்தகிருஷ்ணன், கிராம நிர்வாக அதிகாரிகள் ராஜகுரு, கந்த ராஜ் மற்றும் தலையாரிகள் பங்கேற்று இந்த விழிப்புணர்வு பிரச்ரத்தை மேற்கொண்டனர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பக்தர்கள் வரும் நுழைவாயில் பகுதி, பஸ்நிலையம், தாலுகா அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலர் என 4 இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

Related Stories:

>