காரியாபட்டி, திருவில்லிபுத்தூரில் பறக்கும்படை வாகன சோதனை தீவிரம்

காரியாபட்டி/திருவில்லி, மார்ச் 3:  காரியாபட்டி, திருவில்லிபுத்தூரில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழநாட்டில் ஏப்.6ம் தேதி ஒரேகட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதனையடுத்து அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு முன் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் போலீசார் துணையுடன் தேர்தல் பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் காரியாபட்டி நான்கு வழிச்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் முகாமிட்டு வாகனங்களில் சோதனை செய்து வருகின்றனர்.

காரியாபட்டி தாலுகா அலுவலக துணைநில அளவையர் நாகுதேவன் தலைமையில் கட்டனூர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் காவலர்கள் ராம்சுந்தர், கனகம்மாள், அழகுமலை ஆகியோர் பணம் பட்டுவாடா மற்றும் பரிசுபொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்குவதை தடுக்கும் வகையில் தொகுதி முழுவதும் தீவிர சோதனை செய்து வருகின்றனர். திருவில்லிபுத்தூர் திருவில்லிபுத்தூரில் தனித்தனியாக மூன்று பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஷிப்ட் அடிப்படையில் காலை, மதியம், இரவு என பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று காலையில் பறக்கும் படையினர் அழகாபுரி சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  

Related Stories:

>