×

பிஎம் கிசான் திட்ட நிதியுதவி பெற முகாம்

 

சிவகங்கை, மே 22: கௌரவ நிதித்தொகை பெறும் விவசாயிகள், நிதித் தொகை பெறுவதில் ஏதேனும் பாதிப்பு இருப்பின், அவைகளை நிவர்த்தி செய்ய முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் தற்போது முதல் 15.6.2026 வரை பிஎம் கிசான் நிறைவுறல் முகாம்கள் அனைத்து கிராமங்களிலும் நடைபெற உள்ளது. வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள் சார்பில் இம்முகாம்கள் நடத்தப்படுகிறது.
விவசாயிகள் இந்த கௌரவ நிதித் தொகை பெறுவதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் உங்கள் பகுதி உதவி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலர்களைத் தொடர்பு கொண்டு தங்களது கிராமத்தில் எப்போது முகாம்கள் நடைபெற உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். முகாமின் போது தங்களது ஆவணங்களின் நகல்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : PM Kisan ,Sivaganga ,Collector ,Porkodi ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...