×

கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது

 

விக்கிரவாண்டி, மே 22: பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். விக்கிரவாண்டி அடுத்த சிறுவள்ளிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் மோகன்ராஜ்(22). இவர் நேற்று அதிகாலை 6 மணியளவில் சிறுவள்ளிக்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த பொதுமக்களை நோக்கி, கொடுவா கத்தியை காட்டியும், அசிங்கமாக திட்டியும் மிரட்டியுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய மோகன்ராஜை கைது செய்து அழைத்து வந்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Rowdy ,Vikravandi ,Murugan ,Mohanraj ,Siruvallikuppam ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...