கழுகுமலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தேர்தல் பிரசாரம் துவக்கினார்

கழுகுமலை, மார்ச் 3: கழுகுமலை கோயிலில் கழுகாசலமூர்த்தியை தரிசித்து துண்டுபிரசுரங்களை வைத்து சிறப்பு வழிபாடு நடத்திய அமைச்சர் கடம்பூர் ராஜூ, தேர்தல் பிரசார பணிகளைத்  துவக்கினார்.  கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலுக்கு நேற்று காலை வருகை தந்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, சுவாமியை தரிசித்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இதில் கடந்த 10 ஆண்டுகளாக கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்த துண்டு பிரசுரங்கள், கோவில்பட்டி தொகுதி வாக்காளர் பட்டியல் ஆகியவற்றை வைத்து வணங்கினார். இதைத்தொடர்ந்து தேர்தல் பிரசார பணிகளைத் துவக்கினார்.  குறிப்பாக கழுகுமலை பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் உள்ள பூத் முகவர்களுக்கும், பொதுமக்களுக்கும் துண்டுபிரசுரங்களை வழங்கி வாக்குச்சேகரித்தார்.  துரைச்சாமிபுரம், சி.ஆர்.காலனி, கரடிகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசுகையில், ‘‘அதிமுக சார்பில் வேட்பாளராக யார் நிறுத்தப்பட்டாலும் அதிமுகவின் சின்னமான இரட்டை இலைக்கு வாக்களித்து அமோக வெற்றிபெற செய்ய வேண்டும்’’ என்றார்.

 பிரசாரத்தில் கோவில்பட்டி ஊராட்சிக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், அதிமுக கயத்தாறு மேற்கு ஒன்றியச் செயலாளர் வினோபாஜி, கழுகுமலை நகரச் செயலாளர் முத்துராஜ், ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன், மாணவர் அணி மாவட்ட இணைச் செயலாளர் குருராஜ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலாளர் தர், ஜெ. பேரவை மாவட்டச் செயலாளர், மாவட்டத் தலைவர் மாரியப்பன், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவரும், ஜெ. பேரவை கயத்தாறு மேற்கு ஒன்றியச் செயலாளருமான முத்தையா, முருகன் கூட்டுறவு வங்கி தலைவரும், கழுகுமலை இளைஞர் அணி நகரச் செயலாளருமான கருப்பசாமி, வர்த்தக அணி மாவட்ட அவைத்தலைவர் காமராஜ், ஜெ. பேரவை நகரச் செயலாளர் மாரியப்பன், வேலாயுதபுரம் கூட்டுறவு சங்கத் தலைவர் சுப்புராஜ், எம்.ஜி.ஆர். மன்றம் ராமசுப்பு, வேலுச்சாமி, பூசாரி மாரியப்பன், செட்டிகுறிச்சி கிருஷ்ணசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories:

>