ஆரணி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை: ஆர்டிஓ விசாரனை

ஆரணி, மார்ச் 3: ஆரணி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார். ஆரணி அடுத்த கல்லேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்(29), பெயிண்டர். இவரது மனைவி பூர்ணிமா(23). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். சதீஷ் கடந்த சில மாதங்களாக மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அதேபோல், கடந்த மாதம் 25ம் தேதியும் சதீஷ் மது போதையில் மனைவியை சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பூர்ணிமா வீட்டில் யாரும் இல்லாதபோது தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பூர்ணிமாவை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பூர்ணிமா இறந்தார். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் பூர்ணிமாவின் தாய் மஞ்சுளா கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்தனர். மேலும், பூர்ணாவிற்கு திருமணம் ஆகி ஒரு வருடமே ஆவதால் தற்கொலை குறித்து ஆர்டிஓ பூங்கொடி விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories:

>