×

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று (மே.21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இருந்து மத்திய வங்கக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இன்று (மே.21) நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு வாரத்திற்கு மழை தொடரும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனக் கணித்துள்ளது.

இதேபோல, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும் நாளை (மே.22) பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவாக வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Tags : Tamil Nadu ,Meteorological Survey Centre ,Chennai ,southeastern Arabian Sea ,Central Bank ,Neelgiri ,
× RELATED அதிமுகவில் வேலுமணி அணிக்கு அமைச்சர்...