×

சாதியெனும் இருள் அகற்றிடத் தோன்றிய திராவிடப் பேரொளி அயோத்திதாசரின் புகழ் ஓங்குக: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ‘சாதியெனும் இருள் அகற்றிடத் தோன்றிய திராவிடப் பேரொளி அயோத்திதாசரின் புகழ் ஓங்குக’ என அயோத்திதாசர் பண்டிதரின் 181வது பிறந்த நாள் விழாவையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் “மயங்கிக் கிடந்த நம் இனம் விழித்தெழ, புரட்சிகரச் சிந்தனைகளை விதைத்த திராவிட இயக்கத்தின் முன்னோடி பண்டிதர் அயோத்திதாசர் அவர்கள்.

* அவருக்குத் திருவுருவச் சிலையும் மணிமண்டபமும் அமைத்தது;

* அவரது பெயரில் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கியது உள்ளிட்டவை #DravidianModel-க்குக் கிடைத்திட்ட பெரும் பெருமை!

சாதிபேதமற்ற சமுதாயத்தைக் கட்டமைத்திட, ‘தமிழன்’, ‘திராவிடன்’ ஆகிய சொற்களை அரசியல்களத்தில் ஆயுதமாகப் பயன்படுத்திய அயோத்திதாசரின் சிந்தனைகள் நீடு வாழ வேண்டும்! திராவிடச் சிந்தனை நோக்கி இளைஞர்களை ஈர்த்த அவரது வழியில் பயணிப்போம்! தமிழ்ச் சமூகம் மேன்மையுற தொடர்ந்து பாடுபடுவோம்!” எனவும் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Tags : AYOTIDASAR ,CASTE ,DIMUKA ,K. Stalin ,CHENNAI ,181ST BIRTHDAY ,AYOTTIDASAR PANDIDAR ,PRESIDENT ,RAVIDUB BAROLI ,
× RELATED பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில்...