லால்குடி, புள்ளம்பாடி ஒன்றியங்களில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா

லால்குடி, மார்ச் 3: லால்குடி, புள்ளம்பாடி ஒன்றியங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா முதன்மை செயலாளர் கே.என்.நேரு, மத்திய மாவட்டபொறுப்பாளர் வைரமணி, லால்குடி எம்எல்ஏ., சவுந்தரபாண்டியன் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் நடைபெற்றது. லால்குடி பேரூர் வார்டுகளில் நகர செயலாளர் துரைமாணிக்கம் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். சிவன் கோயில் முன் நடந்த விழாவில் ஒன்றிய சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் ஏழைகளுக்கு வேட்டி, சேலை இனிப்பு வழங்கி கொண்டாடினர். புள்ளம்பாடி ஒன்றியம் அலுந்தலைப்பூர் கிராமத்தில் நடந்த விழாவிற்கு மாவட்ட விவசாய பிரிவு துணைத் தலைவர் கோல்டன் ராஜேந்திரன், ஊராட்சி செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். ஒன்றிய குழு தலைவர் ரசியா, கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையில் பல்வேறு கிராமங்களில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories:

More