×

தர்மமுனீஸ்வரர் கோயிலில் வைகாசி பொங்கல் விழா

 

கமுதி, மே 20: கமுதி அருகே உள்ள பெருமாள் தேவன்பட்டி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற சுயம்பு தர்ம முனீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 300 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் பொது அன்னதானம் மற்றும் வருடாந்திர வைகாசி திருவிழா கடந்த வாரம் காப்புகட்டி துவங்கப்பட்டது. தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் தலையில் சுமந்து ஊர்வலமாக விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று சுயம்பு தர்ம முனீஸ்வரர் கோவிலை அடைந்து, சுவாமிக்கு பாலபிஷேகம்நடைபெற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.

Tags : Vaikasi Pongal festival ,Dharmamuneeswarar Temple ,Kamudi ,Swayambu Dharmamuneeswarar Temple ,Perumal Devanpatti ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...