பேரூராட்சி நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் மணப்பாறை அருகே மின்சாரம் பாய்ந்து திமுக பிரமுகர் பலி

மணப்பாறை, மார்ச் 3: மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் தேர்தல் நன்னடத்தை விதிகளை தொடர்ந்து கட்சி கொடி கம்பங்கள் அகற்றும் பணியில் கட்சியினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடைவீதி பகுதியில் உள்ள இந்திய கம்யூ. கட்சி கொடி கம்பத்தினை அகற்றும் பணியில் கட்சியினர் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு திமுக பிரமுகர் முஸ்தபா மகன் ரஷீதுஅலி(32) என்பவர் உதவி செய்துள்ளார். அப்போது குழியில் இருந்து அகற்றிய கொடி கம்பம் அருகில் மின்சாரம் செல்லும் உயரழுத்த மின் கம்பியில் சிக்கியதில் ரஷீதுஅலி மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் படுகாயமடைந்த நிலையில் அக்கம்பக்கத்தினரால் புத்தாநத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ரஷீதுஅலி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து புத்தாநத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கண்டுகொள்ளாத பறக்கும் படை அதிகாரி

தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கும் இடம் அருகே பணியில் இருந்த தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பாளர் ஜோசப் அந்தோணி காரில் கட்சி கொடி, கையில் கொடியுடன் திரண்டதை பார்த்தும் இவற்றை கண்டும் காணாமல் இருந்ததால் பொதுமக்கள் மற்றும் போலீசார் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

Related Stories:

More