- ரங்கசாமி
- நாராயணசாமி
- புதுச்சேரி
- டெஜா கூட்டணி
- முதல் அமைச்சர்
- பாஜக
- நமச்சிவாய்
- என்.ஆர்
- மல்லடி கிருஷ்ணராவ்
புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் தேஜ கூட்டணி ஆட்சி பதவியேற்றுள்ளது. முதல்வராக ரங்கசாமியும், அமைச்சர்களாக பாஜக நமச்சிவாயம், என்ஆர் காங். மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் பதவியேற்றுள்ளனர். இன்னும் 3 அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. இதில் அமைச்சர் பதவியை பிடிக்க பாஜக உதவியுடன் அதிமுக, லஜகவும் காய்நகர்த்துவதாக தகவல் வெளியாகி வருகின்றன. இதனிடையே புதுச்சேரியில் அமைச்சர் பதவி வழங்க ரூ.100 கோடி வரை பேரம் நடப்பதாக, முன்னாள் முதல்வர் நாராயணசாமி பகீர் தகவலை வெளியிட்டார்.
இதுதொடர்பாக புதுச்cசேரி முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டபோது, அமைச்சர் பதவிக்கு ரூ.100 கோடி பேரம் நடப்பதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகிறார். பேரம் யார் நடத்துகிறார்கள் என்று நாராயணசாமி சொன்னால் அவரிடம் விசாரிக்கலாம். இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றார்.
இதேபோல் அதிமுக மாநில செயலாளரும், தற்காலிக சபாநாயகருமான அன்பழகன் கூறுகையில், புதுச்சேரியில் அமைச்சர் பதவிக்கு ரூ.100 கோடி பேரம் நடப்பதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுவது ஆதரமற்ற குற்றச்சாட்டு. மலிவு விளம்பரத்துக்காக பேசுகிறார். தைரியம் இருந்தால் யார் கேட்டார் என்பதை கூறவேண்டும். வெற்று தோட்டா போன்று அவர் பேசுவதால்தான் புதுவையில் காங்கிரஸ் ஆட்சியே இல்லாமல் போயிற்று என்றார்.
இவ்விவகாரம் தொடர்பாக லஜக தலைவரான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூறுகையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் பதவிக்கு ரூ.100 கோடி பேரம் என பேசுவது, அவர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதையே காட்டுகிறது என்றார்.
