தாந்தோணிமலை குடியிருப்பு அருகே ஆபத்தான நிலையில் டிரான்ஸ்பார்மர் மாற்றியமைக்க கோரிக்கை

கரூர், மார்ச். 3: கரூர் தாந்தோணிமலை குடியிருப்புகளின் அருகே ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை வஉசி தெரு பகுதியில் குடியிருப்பை ஒட்டி டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இதில், இருந்து நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு மின்சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக டிரான்ஸ்பார்மரின் கீழ்ப்புற பகுதிகள் அனைத்தும் சிதிலடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால், பகுதியினர் பீதியில் உள்ளனர். எனவே, இதனை மாற்றித்தர வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்களால் வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு இதனை மாற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>