×

மக்கள் எதிர்பார்ப்பு குளித்தலை பஸ் நிலையம் அருகே தென்கரை வாய்க்கால் பாலத்தில் தடுப்பு சுவரின்றி மக்கள் அவதி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

குளித்தலை, மார்ச் 3: குளித்தலை பஸ் நிலையம் அருகே தென்கரை வாய்க்கால் பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். இதனால் பால ஓர தடுப்புசுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். கரூர் மாவட்டம் குளித்தலை திருச்சி மெயின் ரோட்டில் பஸ் நிலையம் அருகே தென்கரை வாய்க்கால் பாலம் ஒன்று இருக்கிறது இந்த வாய்க்கால் பாலத்தின் வழியாகத்தான் குளித்துறை நகரத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் செல்வோர் தினம்தோறும் ஆயிரக்கணக்கானோர் புறவழிச்சாலை சென்று திருச்சி டோ கரூர் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது மேலும் நகர மையப்பகுதியில் இறந்தவர்கள் உடலை இந்த பாலத்தின் வழியாகத்தான் எடுத்துச் சென்று காவிரி கரைக்கு செல்வது வழக்கம்.

மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காவிரி ஆற்றுக்கு குளிக்கச் செல்லுவதும் இந்த பாலத்தின் வழியாகத்தான் சென்று வருகின்றனர் இந்நிலையில் இந்த தென்கரை வாய்க்காலில் தண்ணீர் செல்லும் பொழுது இரு சக்கர வாகனத்தில் செல்வோர் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது காரணம் வாய்க்கால் பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் மற்றும் ஓர கைப்பிடி சுவர் இல்லாத நிலையில் இருந்து வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. இதனால் ஆற்று பாதுகாப்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி தென்கரை வாய்க்கால் பாலத்தில் கைப்பிடி சுவர் அமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.




























Tags : South Coast Canal Bridge ,
× RELATED கே.பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே வலுவிழந்த தென்கரை வாய்க்கால் பாலம்