கலெக்டரிடம் மனு திருச்சி ஏர்போர்ட்டில் கேட்பாரற்று கிடந்த ரூ.40 லட்சம் நகைகள் கடத்தி வந்த மர்ம நபர் பற்றி அதிகாரிகள் சிசிடிவி மூலம் ஆய்வு

திருச்சி, மார்ச் 2: திருச்சி விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.40 லட்சம் தங்க நகைகளை கைப்பற்றிய சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை கடத்தி வந்த மர்ம நபர் யார் என்பது குறித்து சிசிடிவி கேமராக்கள் மூலம் ஆய்வு செய்து வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய், மஸ்கட், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து பயணிகள் வருவதால் விமான நிலையத்தில் தினமும் காலையிலும், மாலையிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை விமான நிலையத்தில் இமிகிரேஷன் பிரிவு அருகிலுள்ள கழிவறை வளாகத்தை விமான நிலைய ஊழியர் ஒருவர் சுத்தம் செய்ய சென்றார். அப்போது அங்குள்ள ஒரு கழிவறையில் ரூ.40 லட்சம் மதிப்பிலான 840 கிராம் தங்க நகைகள் ஒரு காகிதத்தில் சுற்றப்பட்டு கேட்பாரற்று கிடந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து விமான நிலைய வான்நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். உடனே அங்கு வந்த அதிகாரிகள் அந்த தங்கத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். வெளிநாட்டில் இருந்து தங்க நகைகளை கடத்தி வந்த மர்ம நபர், சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து அவற்றை கழிவறையில் வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது. மேலும், நேற்று காலை துபாயில் இருந்து வந்த விமானத்தில் வந்த நபர்களில் ஒருவர் அந்த தங்கத்தை கழிவறையில் போட்டுவிட்டு சென்றிருக்கலாமா? என்ற கோணத்திலும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்குள்ள சிசிடிவி கேமராக்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories:

>