அகில இந்திய கராத்தே போட்டி திருவில்லிபுத்தூர் மாணவர்கள் வெற்றி

திருவில்லிபுத்தூர், மார்ச் 2: அகில இந்திய கராத்தே போட்டியில் திருவில்லிபுத்தூர் மாணவர்கள் வெற்றி பெற்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஜப்பான் சிட்டோரியு சார்பில் அகில இந்திய ஓபன் கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். திருவில்லிபுத்தூரில் இருந்து ‘இன்டர்நேஷனல் சோட்டோகான் கராத்தே அகாடமி ஆஃப் இந்தியா’ சார்பில் சென்சாய், செபஸ்தியான் தலைமையில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

குமித்தே 35 கிலோ எடை பிரிவில் ஹரிகிருஷ்ணன் முதலிடமும், 45 கிலோ எடை பிரிவில் அருண்குமார் இரண்டாம் இடமும், 50 கிலோ எடை பிரிவில் கபிலன் இரண்டாம் இடமும், 40 கிலோ எடை பிரிவில் மோகுல் கிருஷ்ணன் இரண்டாம் இடமும், 30 கிலோ கிலோ எடை பிரிவில் பாலஹரிகரன், சிவகுமார் ஆகியோர் மூன்றாம் இடம் பிடித்தனர்.வெற்றி பெற்ற மாணவர்களை சோட்டோகான் கராத்தே பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

Related Stories:

>