×

வைகை கரையோர கிராமங்களில் நெல் அறுவடை தீவிரம் அதிக விளைச்சலால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஆண்டிபட்டி, மார்ச் 2: ஆண்டிபட்டி பகுதியில் வைகை கரையோர கிராமங்களில் நெல் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குன்னூர், அம்மச்சியாபுரம், டி.அணைக்கரைப்பட்டி, தர்மத்துப்பட்டி, மூனாண்டிபட்டி புதூர், புள்ளிமான் கோம்பை உள்ளிட்ட வைகை ஆற்றங்கரையோர கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் நடந்து வருகிறது. இப்பகுதியில் காய்கறி சாகுபடி அதிகமாக நடக்கும். இந்நிலையில், கடந்தாண்டு நன்றாக மழை பெய்ததால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் பயிரிட்டனர்.

கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை, இந்த ஆண்டு ஜனவரி வரை தொடர்ந்ததால் நெற்பயிர்கள் செழிப்பாக வளர்ந்தன. கடந்த மாதம் மழை நின்றுவிட்ட நிலையில் ஐப்பசி மாதத்தில் நடவு செய்த நெல் நாற்றுகள் விளைந்து அறுவடைக்கு தயாரானது. விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்யும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. பெரும்பாலும் அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை நடைபெற்று வருகிறது. நெல்லும் நன்றாக விளைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Vaikai coast ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ