காளையார்கோவில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா

காளையார்கோவில், மார்ச் 2:  காளையார்கோவில் பஸ்நிலையத்தில் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி தலைமை வகித்து இனிப்புகள் வழங்கினார். ஏற்பாட்டை நகர செயலாளர் கருணாநிதி செய்திருந்தார். காளையார்கோவில் வடக்கு ஒன்றியத்தில் முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் தமிழரசன் தலைமையில் நடந்த விழாவில் மதகுபட்டி ஆதரவற்றோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது.

ஏற்பாட்டை முத்தூர் கிளை கழக செயலாளர் கருப்பையா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் காளைமணி, கீரனூர் அண்ணாதுரை, ஒன்றிய கவுன்சிலர் ராமலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், செல்வராஜ், ஐயப்பன், பூக்கடை சுகுமார், குருவாயூரப்பன், நகரப்பட்டி கிளை செயலாளர் பில்லப்பன், வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: