காளையார்கோவிலில் தேசிய அறிவியல் தினம்

காளையார்கோவில், மார்ச் 2: காளையார்கோவிலில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டத் தலைவர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். வட்டாரத் தலைவர் வீரபாண்டி, கௌரவத் தலைவர் நாகலிங்கம் முன்னிலை வகித்தனர். வட்டாரச் செயலாளர் ஆரோக்கிய ஜெயசாலமலர் வரவேற்றார்.தேசிய அறிவியல் தின உறுதிமொழியை டேவிட் கூறினார்.

சிலுக்கபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அன்புநாதன், அறிவியல் வளர்ச்சி என்ற தலைப்பில் உரையாற்றினார்.செஞ்சிலுவை சங்க சேர்மன் தெய்வீக சேவியர் தேசிய அறிவியல் நாளின் முதன்மையான நோக்கம் நாட்டு மக்கள் அனைவருக்கும் அறிவியலைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே என்று வாழ்த்தி பேசினார்.செயலாளர் அலெக்சாண்டர் துரை, குழந்தைகள் அல்லது மாணவர்கள் தமது எதிர்கால பணிகளுக்கான பாடமாக அறிவியலை தேர்வு செய்வதற்கு உத்வேகம் அளிக்க வேண்டும் என்றார்.

குழந்தைகளுக்கு எளிய அறிவியல் பரிசோதனைகள் செய்து காண்பிக்கப்பட்டன. அறிவியல் வினாக்கள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. வட்டார துணைத் தலைவர் ஆரோக்கிய பாஸ்கர் நன்றி கூறினார்.

Related Stories: