×

திருப்புத்தூர் அருகே மாட்டுவண்டி பந்தயம்: 5 பேர் மீது வழக்கு

 

திருப்புத்தூர், மே 18: திருப்புத்தூர் அருகே பட்டமங்கலத்தில் அழகு சௌந்தரி அம்பாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு அரசு அனுமதியின்றி இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றதாக 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாட்டு வண்டி பந்தயம் பட்டமங்கலம் – திருப்புத்தூர் சாலையில் நடைபெற்றது. இப்போட்டியில் பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. இதில் பெரியமாடு பிரிவில் 9 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 20 ஜோடிகள் என மொத்தம் 29 ஜோடிகள் பங்கேற்றன. இதில் பெரிய மாடு பிரிவிற்கு 7 மையில் தூரமும், சிறிய மாடு பிரிவிற்கு 5 மையில் தூரமும் எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.

 

Tags : Tiruputhur ,Azhughu Soundarya Ambal temple festival ,Pattamangalam ,Tiruputhur.… ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...