×

டெய்லரிடம் பணம் பறித்த 4 பேர் கும்பல் அதிரடி கைது

 

திருப்பூர், மே 18: திருப்பூரில் லாட்ஜில் அழகிகளுடன் உல்லாசமாக இருக்கலாம் என கூறி டெய்லரிடம் பணம் பறித்த 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (28), இவர் பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தது. அதில், திருப்பூரில் குறிப்பிட்ட லாட்ஜ்களில் அழகிகள் இருப்பதாகவும், பணத்தை அனுப்பினால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தது. இதில் சல்லாபம் அடைந்த சந்தோஷ்குமார், சம்பந்தப்பட்ட செயலி மூலமாக தொடர்பு கொண்டபோது, அழகிகளின் புகைப்படத்தை அனுப்பி பணம் கேட்டுள்ளனர்.

 

Tags : Taylor ,Tiruppur ,Santoshkumar ,Tiruppur Metuppalayam ,Banyan ,
× RELATED டிரைவரை அடித்து கொன்ற வாலிபர் மீது குண்டாஸ்