கமுதி பகுதியில் ஸ்டாலின் பிறந்த நாள் உற்சாகம்

கமுதி, மார்ச் 2:  கமுதி பேருந்து நிலையம் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின் பேரில் நகர பொறுப்பாளர் பாலமுருகன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் ஊராட்சி ஒன்றிய சேர்மன் தமிழ்ச்செல்வி போஸ், ஒன்றிய துணைச் சேர்மன் சித்ராதேவி அய்யனார், ஊராட்சி மன்ற தலைவர்கள் நாகரத்தினம், முத்துவிஜயன்,காவடிமுருகன், ஒன்றிய மீனவரணி காசிலிங்கம், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயராஜ்,மாரிமுத்து, முத்துகிளி, ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் பாரதிதாசன், அ.பள்ளப்பச்சேரி கிளைச் செயலாளர் முருகன்,தகவல் தொழில்நுட்ப பிரிவு கமுதிமுத்துஉட்பட பலர் கலந்து கொண்டனர்.

பெருநாழியில், தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் மனோகரன் தலைமையில் கேக்வெட்டி திமுகவினர் கொண்டாடினர். இதில் ஒன்றிய கவுன்சிலர் உதயக்குமார், விவசாயஅணி செந்தூர்பாண்டியன், செந்தூரான்,ஊராட்சி மன்ற தலைவர் ஆத்திமுத்து, கிளைச் செயலாளர் மன்சூர்அலி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி,இளைஞரணி கென்னடி கலந்து கொண்டனர்.  பேரையூரில் மத்திய ஒன்றிய பொறுப்பாளர் சண்முகநாதன் தலைமையில், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் ஒன்றிய துணைச் செயலாளர் கிழவராஜன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்துகிருஷ்ணன்,கூட்டுறவு தலைவர் குருவையா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பரமக்குடி: பரமக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பரமக்குடி வசந்தபுரம் பகுதியில் போகலூர் மாவட்ட கவுன்சிலர் முருகேசன் சார்பில், கலையூர் ஒன்றிய கவுன்சிலர் நதியா மனோகரன் தலைமையில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் ஏழை எளிய மக்களுக்கும் திமுக மூத்த உறுப்பினர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. இதில் உதயநிதி ஸ்டாலின் நகர் பொறுப்பாளர் துரைமுருகன், தொழிலதிபர் கணேசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: