திண்டுக்கல் ஆர்டிஓ அலுவலகத்தில் அனைத்து கட்சி கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல், மார்ச் 2: திண்டுக்கல் ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் குறித்த அனைத்து கட்சி கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. ஆர்டிஓ காசிச்செல்வி தலைமை வகித்தார். கூட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் நடத்தை விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும், சட்ட- ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் நேர்மையான, சுதந்திரமான முறையில் தேர்தல் நடைபெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து கட்சியினருக்கும் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. இதில் டிஎஸ்பி மணிமாறன், தாசில்தார்கள் அபுரிஸ்வரன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: