தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஆர்டிஓ தலைமையில் நடந்தது

செய்யாறு, மார்ச் 2: செய்யாறில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆர்டிஓ என்.விஜயராஜ் தலைமையில் நேற்று நடந்தது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த பிப்.26ம் தேதி தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அறிவித்தது. இந்நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆர்டிஓவுமான என்.விஜயராஜ் தலைமையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் செய்யாறு தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது. தாசில்தார்கள் சு.திருமலை, குமரவேலு, நேர்முக உதவியாளர் எல்.பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வருவாய்துறை, போலீஸ், நகராட்சி, உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் என்.விஜயராஜ் பேசுகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் ஒவ்வொரு துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து அரசியல் விளம்பரம் சுவரொட்டிகள், போஸ்டர்கள், பெயிண்டிங், பேனர்கள், கொடிக்கம்பங்கள் அகற்றுவதும் அரசியல் கட்சித்தலைவர்களின் சிலைகளை பத்திமாக மூடி மறைத்திட வேண்டும். அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் செய்யா்று தொகுதியில் அமைதியான முறையில் சட்டமன்றத் தேர்தலை எதிர்க்கொள்ளலாம். அதேபோல் பறக்கும் படையினர் நிலைக்கண்காணிப்புக் குழுவினர் முழு கண்காணிப்புடன் செயல்பட வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து எந்த சந்தேகம் இருந்தலாம் உடனுக்குடன் அலுவலர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

Related Stories:

>