×

சீரமைக்க கோரிக்கை திருவாரூரில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்

திருவாரூர் மார்ச் 2: திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திருவாரூர் ஒன்றியத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகளை ஒன்றிய செயலாளர் தேவா வழங்கினார். திருவாரூர் ஒன்றியம் புலிவலம் ,வேலங்குடி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் கட்சி கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை ஒன்றிய செயலாளரும், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவருமான தேவா வழங்கினார். இதில் ஒன்றிய அவைத்தலைவர் செல்வராஜ் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் திருவாரூர் நகரில் நகர செயலாளர் பிரகாஷ் தலைமையில் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். மேலும் கொரடாச்சேரி வடக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் தலைமையிலும், தெற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் பாலச்சந்தர் தலைமையிலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

Tags : MK Stalin ,Thiruvarur ,
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...