×

தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தும் கலெக்டர் பெயர் பலகை மாற்றாததால் வாக்காளர்கள் அதிர்ச்சி

திருவாரூர், மார்ச். 2: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு 3 நாட்கள் கடந்த பின்னரும் தனது பெயர் பலகையை கலெக்டர் சாந்தா மாற்றாமல் இருந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் அடுத்த மாதம் 6ந் தேதி நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இதற்கான அறிவிப்பு என்பது கடந்த மாதம் 26ம் தேதி மாலை அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்ததையடுத்து மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் தொடர்பான பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. . இந் நிலையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலராக மாறி தனது அலுவலகத்திலும் வாகனத்திலும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் என்று பெயர்ப்பலகை வைப்பது வழக்கம்.  ஆனால் திருவாரூர் கலெக்டர் சாந்தாவோ தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நேற்றுடன் 3 நாட்கள் கடந்த பின்னரும் தனது பெயர் பலகையினை மாற்றவில்லை. எனவே திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி உடனடியாக தேர்தல் விதிமுறைகளை கடைப்பிடிப்பதற்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் அதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனவும் வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு