திருச்செந்தூரில் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம்

திருச்செந்தூர், மார்ச் 2: திருச்செந்தூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து அரசியல் கட்சியினர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக ஏப். 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து தேர்தல் விதிமுறைகள் குறித்து அரசியல் கட்சியினருடனான கூட்டம் ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ஆர்டிஓ தனப்ரியா தலைமை வகித்து, பின்பற்ற வேண்டிய தேர்தல் விதிமுறைகள் குறித்து அரசியல் கட்சியினருக்கு விளக்கமளித்தார். ஏஎஸ்பி ஹர்ஷ்சிங், தாசில்தார்கள் முருகேசன், இசக்கிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் துணை தாசில்தார்கள் பாலசுந்தரம், சுந்தரராகவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், திமுக மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் ஜெபராஜ், நகர திமுக பொறுப்பாளர் வாள்சுடலை, அதிமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் மகேந்திரன், முன்னாள் பேரூராட்சித்தலைவர் சுரேஷ்பாபு, பாஜக மக்கள் தொடர்பு பிரிவு தலைவர் பாலசுப்பிர மணியன், காங்கிரஸ் விவசாய அணி மாவட்ட தலைவர் வேல்.ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச்செயலாளர் முத்துக்குமார், பாமக ஒன்றியச்செயலாளர் பிரபாகரன், சிவபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>