×

கடன் தள்ளுபடி பயனாளிகள் பட்டியலை வேளாண் கூட்டுறவு சங்க வாசலில் ஒட்ட வேண்டும்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 2: கடன் தள்ளுபடி பயனாளிகள் பட்டியலை வேளாண் கூட்டுறவு சங்க வாசலில் ஒட்ட வேண்டும் என நுகர்வோர் மையம் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர் மைய தலைவர் வக்கீல் நாகராஜன் கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது. தமிழக அரசு விவசாயிகளுக்கு சென்ற ஆண்டு வரை வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் வாங்கிய விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளது.  அதன் அளவு ரூ. 12 ஆயிரத்து 500 கோடி.மேலும் தற்போது மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய 6 பவுன் வரை உள்ள நகை கடன்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.குறிப்பாக விவசாய கடன்களில் பலர் போலியாக சிட்டா அடங்கலை வைத்து லட்சக்கணக்கில் கடன் பெற்றுள்ளனர்.பல இடங்களில் நஞ்சை நிலங்களில் பொதுமக்கள் வீடு கட்டியுள்ளனர்.

அதனையும் நஞ்சை நிலம் என காட்டி வருவாய் துறையினர் உதவியுடன் விவசாய கடனாக தரப்பட்டுள்ளது. இதனால் உண்மையான விவசாயிகளுக்கு அவர்கள் வாங்கிய கடன் தள்ளுபடி ஆகவில்லை.  இதனால் விவசாயிகள் பெருத்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அதுபோல போலியான மகளிர் குழுக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்றுள்ளனர்.அதனையும் சரிபார்க்க விவசாயிகள் பெயர், அவர்கள் வாங்கிய கடன் அளவு ,நிலத்தின் சர்வே நம்பர், முகவரி மகளிர் சுய உதவி குழுக்களின் பெயர் நிரந்தர முகவரி ஆகியவை அடங்கிய பயனாளி பட்டியலை வேளாண்மை கூட்டுறவு சங்க வாயிலில் ஒட்டினால் பொதுமக்கள் பார்வையிட்டு உண்மையான பயனாளிகள் பட்டியலை அறியலாம்.இதனால் போலி பயனாளிகளை கண்டுபிடிக்க இயலும். தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து கடன் சலுகை பெற்ற விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களின் பட்டியலை உடனடியாக வேளாண் கூட்டுறவு சங்க வாசலில் ஒட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags : Agricultural Co-operative Society ,
× RELATED கூட்டுறவு செயலாளர் மண்டை உடைத்தவர்...