×

2026-ஆம் ஆண்டிற்கான ஓராண்டு தொழில்முனைவோர் சான்றிதழ் கல்விக்கான சேர்க்கை அறிவிப்பு

 

சென்னை: தமிழ்நாடு அரசு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் 2026-ஆம் ஆண்டிற்கான ஓராண்டு தொழில்முனைவோர் சான்றிதழ் கல்விக்கான சேர்க்கை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமானது. தமிழ்நாட்டில் மற்றும் உள்ளூர் புத்தாக்கம் தொழில்முனைத்தலுக்கான கலாச்சாரத்தை வளர்க்கவும், கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கவும் செயல்பட்டு வருகிறது.

தற்போது, அகமதாபாத்தில் உள்ள இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்துடன் (EDII Ahmedabad) இணைந்து மூன்றாம் ஆண்டிற்கான. ஓராண்டு தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்க சான்றிதழ் கல்விக்கான (Batch 3) சேர்க்கையை தொடங்கியுள்ளது.

* சான்றிதழ் கல்வியின் சிறப்பம்சங்கள்

இந்த சான்றிதழ் கல்வியானது தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறை தொழில்முனையும் தலைவர்களை உருவாக்குவதற்கான ஒரு முதன்மைத் EDII TNT உள்ளூரில் உள்ள தொழில்முனைதலுக்கான சூழல்கள் மற்றும் EDII அகமதாபாத்தின் உலகத்தரம் தளமாகச் செயல்படுகிறது. வாய்ந்த பாடத்திட்ட தரம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, மாணவர்களுக்கு நேரடி தொழில்முனைதலுக்கான பயிற்சியை இச்சான்றிதழ் படிப்பு வழங்குகிறது.

அனுபவமிக்க வழிகாட்டுதல்கள்: இரண்டு ஆண்டுகள் வெற்றிகரமாக முடித்துள்ள நிலையில், 3-வது ஆண்டு மாணவர்கள் மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின் மூலம் பயனடைவர்.

உலகத்தரம் வாய்ந்த பாடத்திட்டம்: EDII அகமதாபாத் ஆசிரியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் வழிகாட்டுதல், நவீன திறன் வகுப்பறைகள் மற்றும் நூலக வசதிகள்.

நேரடி அனுபவப் பகிர்வு: வெறும் கற்பித்தல் முறை கல்வியாக மட்டுமில்லாமல், களப்பயணங்கள் மூலம் நிஜ உலக வணிகச் சூழலை மாணவர்கள் நேரடியாகக் கற்றுக்கொள்ளலாம்

* தகுதிகள் மற்றும் சேர்க்கை விவரங்கள்:

பட்டதாரிகள் அல்லது தொழில்துறை பயிற்சி முடித்து சொந்தமாகத் தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள்

வயது வரம்பு: 21 முதல் 40 வயது வரை.

கல்விக் கட்டணம்: ₹80,000/-(அரசால் நிர்ணயிக்கப்பட்டது).

வகுப்பு தொடங்கும் நாள்: ஜூன் 15, 2026.

* விண்ணப்பிக்கும் முறை

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் EDII TN யின் இணைதளத்தில் விண்ணப்பிக்கலாம். முந்தைய ஆண்டுகளில் நிலவிய அதிக தேவையைக் கருத்தில் கொண்டு, முன்கூட்டியே பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

இணையவழி விண்ணப்பம்: https://www.editn.in/Web-One-Year-Registration

அதிகாரப்பூர்வ இணையதளம்: www.editn.in

சேர்க்கை தொடர்பான விசாரணைகளுக்கு: ‘தொலைபேசி: 8668101638

மின்னஞ்சல் : academy@editn.in

Tags : Chennai ,Tamil Nadu Government Entrepreneurship Development and Innovation Institute ,Micro, Small and Medium Enterprises ,MSME ,Department of the Government of Tamil Nadu… ,
× RELATED தவெகவுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர்...