×

திருமணம் செய்வதாக கூறி ரூ.14 லட்சம் பறிப்பு வாலிபர் வீட்டு முன் பெண் தர்ணா போராட்டம்

பெரம்பலூர்,மார்ச் 2: தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தை சேர்ந்தவர் ஆனந்தவேல். இவரது மனைவி மகாலட்சுமி (32). இவர் பட்டிமன்ற பேச்சாளராக உள்ளார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவரது கணவர் ஆனந்தவேல் பிரிந்து சென்றுவிட்ட நிலையில் மகாலட்சுமி திருச்செந்தூரில் தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். அதே ஊரில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், பெரம்பலூர் தம்பி நகரை சேர்ந்த ஜோசப் மகன் ஜெகன் (36) என்பவர் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக வேலை செய்துவந்தார். அப்போது ஜெகனுக்கும், மகாலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாலட்சுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரிடமிருந்து ரூ.14 லட்சம் பணத்தை ஜெகன் வாங்கி கொண்டார். பின்னர் அவர், திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் தன்னிடமிருந்து பெற்ற பணத்தை ஜெகனிடமிருந்து பெற்றுத்தர வேண்டும். திருமணம் செய்து கொள்வதாய் கூறி ஏமாற்றிய ஜெகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பெரம்பலூரில் உள்ள ஜெகன் வீட்டு வாசல் முன் நேற்று மாலை மகாலட்சுமி தனது மகன், மகளுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மகாலட்சுமியுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறு தி அளித்ததின்பேரில் மகாலட்சுமி தர்ணா போராட்டத்தை கைவிட்டுவிட்டு பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். இது குறித்து பெ ரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Tarna ,
× RELATED புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு கூடுதல்...