×

பூர்வீக இடத்தை பிரித்து கொடுக்காததால் ஓய்வு பெற்ற பெல் ஊழியர் தீக்குளிக்க முயற்சி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
பெரம்பலூர்,மார்ச் 2: தனது சகோதரர்கள் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றுக்கொண்டு, நிலத்தை பாகம்பிரித்து கொடுக்க மறுத்ததால், ஓய்வு பெற்ற பெல் ஊழியர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா, கூத்தூர், கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன்(67). ஓய்வு பெற்ற பெல் ஊழியர். இவர் மற்றும் இவரது சகோதரர்களுக்கு அருகேவுள்ள நொச்சிகுளம் மற்றும் ஜெமீன் ஆத்தூர் ஆகிய கிராம எல்லை பகுதியில் 7.3ஏக்கர் நில ம் இருந்துள்ளது. சாமிநாதன், தனது மனைவி செல்வம்பாள் மற்றும் பிள்ளைகளுடன் சொந்த ஊரான ராமலிங்கபுரம் கிராமத்தில் தனியாக வீடு கட்டி அங்கேயே குடியிருந்து வருகிறார். இந்நிலையில் சாமிநாதன் தனது சகோதரர் மகன்கள், தனது மகன் கோபிநாத்துக்கு வேலை வாங்கித்தருவதாக ரூ.3லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு வேலைவாங்கி தராமல் பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி விட் டதாகவும், இதுகுறித்து குன்னம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் காவல் நிலையத்தில் எந்தஒரு நட வடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றும், கடன் தொல்லையால் வாடும் தனக்கு சொந்தமான நிலத்தை பாகப்பிரிவினை செய்துதர சகோதரர்களிடம் கேட்டபோது அதற்கு மறுப் பும் தெரிவித்துவிட்டனராம்.

கடந்த 7 ஆண்டுகளாக வருவாய்த்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் மனுஅளித்தும் எந்தவித நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நேற்று தனது மனைவி செல்வாம்பாளுடன் பெரம்பலூர் கலெ க்டர் அலுவலகத்திற்கு வந்த சாமிநாதன் சிறிது நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் தனது தலையில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது கலெக்டர் அலுவலகம் முன் பணியில் இருந்த பெண் போலீசார் ஓடிவந்து அவரை தடுத்து, தலையில் தண்ணீர் ஊற்றி தனியாக அழைத்து சென்று, பிரச்னைக்குறித்து கேட்டறிந்து விரைவில் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள் எனக்கூறியதால் சாமிநாதன் தனது மனைவியுடன் ஊருக்கு திரும்பி சென்றார். இதனால் கலெக்டர் அலுவலகம் முன் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Bell ,Perambalur Collector ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல்...