தேர்தலை முன்னிட்டு துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும்

திருப்பூர், மார்ச் 2: திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. அதனால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து துப்பாக்கி உரிமதாரர்களும் தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திலோ அல்லது உரிமம் பெற்ற தனியார் ஆயுத கிடங்குகளிலோ, படைக்கல( ஆயுதம்) சட்டப்படி துப்பாக்கிகளை ஒப்படைத்து அதற்கான ரசீதுகளை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிகளை போலீஸ் நிலையம் அல்லாது வேறு இடத்தில் ஒப்படைத்தால், ஒப்படைக்கப்பட்டதற்கான ரசீது நகல்களை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். துப்பாக்கிகளை ஒப்படைக்க தவறும் பட்சத்தில் படைக்கல (ஆயுதம்) சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>