×

திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர்களுக்கு திமுக வேட்பாளர் நன்றி தெரிவிப்பு

திருப்பரங்குன்றம், மே 15: திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டி, தொகுதி மக்களை நேரில் சந்தித்து நன்றி கூறினார். கடந்த சட்டசபை தேர்தலில், திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக சார்பில் தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டி வேட்பாளராக போட்டியிட்டார். இவர் 72 ஆயிரத்து 763 வாக்குகளை பெற்றார்.

இந்நிலையில் அவர் கடந்த இரண்டு நாட்களாக தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களை சந்தித்து நன்றி கூறி வருகிறார். இதன்படி நேற்று எலியார்பத்தி பகுதிக்கு சென்ற அவர், அங்குள்ள பெண்களை சந்தித்து, தனக்காக வாக்களித்தமைக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அங்கிருந்த பெண்கள் நெகிழ்ச்சியோடு கண்ணீர் மல்க அவரிடம் பேசினர். அப்போது ஒன்றிய செயலாளர் வேட்டையன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

Tags : DMK ,Thiruparankundram ,Krithika Thangapandi ,Krithika ,Southern District Women's Wing ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...