- பிரபு ஈசான்
- அதிகாரி நந்தி
- சித்திராய்
- பிரம்மபுரீஸ்வரர் கோவில்
- பெரம்பலூர்
- இறைவன்
- ஒரு
- அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்ம புரீஸ்வரர்
- கோவில்
- துறையூர் ரோடு, பெரம்பலூர் நகராட்சி
- சித்திரை பிரதோஷம்…
பெரம்பலூர், மே 15: பெரம்பலூரில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் ஈசன் மற்றும் அதிகார நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பெரம்பலூர் நகராட்சி துறையூர் சாலையில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் நேற்று(14ஆம் தேதி) சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 4:30 மணிமுதல் 6:30 மணியளவில் ஈசன் மற்றும் அதிகார நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதன்படி ஈசன் மற்றும் அதிகார நந்திக்கு பால், தயிர், சந்தனம், இளநீர்,பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து மகா தீபாரதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்வில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், சிவனடியார்கள், பெரம்பலூர், அரணாரை, துறைமங்கலம் பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள், கலந்து கொண்டு ஈசன் அருள் பெற்றனர்.
ஈசன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருக்கோயில் உட்பிரகாரம் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை கௌரி சங்கர் மற்றும் முல்லை சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் (பொ) அசனாம்பிகை செய்திருந்தார்.
