×

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினர் 90 பேர் நீலகிரி வருகை

ஊட்டி, மார்ச் 2: தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படை நீலகிரிக்கு வந்துள்ளது. சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12ம் தேதி துவங்கி 19ம் தேதி வரை நடக்கிறது. தொடர்ந்து வேட்புமனு பரிசீலனை 20ம் தேதி நடக்கிறது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.    தற்போது, மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பணம் வழங்குவதை தடுக்கவும், பரிசுப் பொருட்களை வழங்குவதை தடை செய்ய வருவாய்த்துறை குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர பாதுகாப்பு பணிகளுக்காக 90 துணை ராணுவ படையினர் நீலகிரி மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் நாளை முதல் வருவாய்த்துறை சார்பில், அமைக்கப்பட்டுள்ள தனி படையினருடன் பாதுகாப்பு பணி மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட உள்ளனர். மேலும், மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடியில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.   இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக வெளி மாநிலங்களில் இருந்து 90 துணை துணை ராணுவ படையினர் வந்துள்ளனர். இவர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் ஆணையம் அமைத்துள்ள பறக்கும் படை அதிகாரிகளுடன் பணியில் ஈடுபடுவார்கள். இவர்கள் அனைத்து பகுதிகளிலும் உள்ளூர் காவல் துறையுடன் இணைந்து பணியாற்ற உள்ளனர். என்றனர்.

Tags : Nilgiris ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...