திரளான பக்தர்கள் தரிசனம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 68வது பிறந்த நாள் கொண்டாட்டம்

கரூர், மார்ச். 2: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 68வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் கரூர் மனோகரா கார்னர் பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.தொடர்ந்து அந்த பகுதியின் வழியாக வந்த பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், கரூர் மாவட்டம் முழுதும் திமுக சார்பில் இனிப்புகள் வழங்கியும், பல்வேறு போட்டிகள் நடத்தியும் கொண்டாடி மகிழ்ந்தனர். நிகழ்வில், மாவட்ட துணைச் செயலாளர் மகேஸ்வரி, முன்னாள் துணைச் செயலாளர் பிரபு, நகர பொறுப்பாளர்கள் கனகராஜ், கணேசன், தாரணி சரவணன், ராஜா மற்றும் சங்கர் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

Related Stories:

>