தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் காவல் துறையில் 10 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பாக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் இப்போது உளவுத்துறை டிஜிபியாக இருந்த பால நாக தேவி ஐபிஎஸ் சைபர் கிரைம் டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு உளவுப்பிரிவு டிஐஜியாக ஐபிஎஸ் அதிகாரி தர்மராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாகெர்ல செபாஸ் கல்யாண் டிஐஜி உளவுத்துறையாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎஸ் பி.சரவணன் டிஐஜி, சிஐடி உளவுத்துறையாக நியமனம், ஐபிஎஸ் காரட் காருண் உத்தவராவ் எஸ்.பி கிரைம் உளவுத்துறையாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ், எஸ்.பி ஏ.மயில்வாகனன் எஸ்.பி-I, சிறப்பு பிரிவு சிஐடியாக பணியிட மாற்றம், எஸ்.பி சி.மதன் எஸ்.பி-I, பாதுகாப்பு பிரிவு சிஐடியாக நியமனம் செய்யப்பட்டார்.
கே.சண்முகம் எஸ்.பி-II, சிறப்பு பிரிவு சிஐடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். எஸ்.பி, மெட்ரோ மண்டலம், கிரைம் பிரிவு சிஐடி இருந்த ஜி.எஸ்.மாதவன் எஸ்.பி-II, பாதுகாப்பு பிரிவு சிஐடியாக நியமனம் செய்யப்பட்டார். என்.சிலம்பரன்சன், எஸ்பி, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவில் இருந்து எஸ்.பி, சிறப்பு பிரிவு, சிஐடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
டாக்டர் தாரேஸ் அகமது, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலராக நியமனம் செய்யப்பட்டார். அனு ஜார்ஜ் – கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலராக நியமனம், மரியம் பல்லவி பல்தேவ் – சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலராக நியமனம், த.உதயச்சந்திரன் – தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமனம், குமார் ஜெயந்த் – தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டார்கள்.
