×

இரு தரப்பினர் மோதல்

 

பெரம்பூர், மே 14: புளியந்தோப்பு காந்திநகர் 3வது தெருவை சேர்ந்தவர் ஏழுமலை(23). இவரது அண்ணன் ஜனார்த்தனன். கடந்த 8ம் தேதி இரவு 10 மணியளவில் இருவரும் வீட்டின் வெளியே பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் குடிபோதையில் வீண் பிரச்னை செய்தார். ஏற்கனவே, இவர்களுக்குள் முன்விரோதம் இருந்த நிலையில் ஏழுமலை தரப்பிற்கும், சதீஷ்குமார் தரப்பிற்கும இடைய கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில் இருதரப்பினரும் மோதிக் கொண்ட நிலையில், சதீஷ்குமார் சிறிய கத்தியால் ஏழுமலையை வெட்டினார். இதில்,ஏழுமலையின் பாட்டி ஜெயலட்சுமி(60) என்பவரும் பலத்த காயமடைந்தார்.
இதுகுறித்து ஏழுமலை அளித்த புகாரின்பேரில், பேசின் பிரிட்ஜ் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து, புளியந்தோப்பு காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(32), உதயகுமார்(34) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Perampur ,Elumalai ,3rd Street ,Pulianthopu Gandhinagar ,Janarthan ,Satish Kumar ,
× RELATED ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் வெட்டிய நண்பர் கைது