தியாகராஜ பாகவதர் 111வது பிறந்த தினம்

நாமக்கல், மார்ச் 2: தமிழ்  சினிமாத்துறையின் முதல் சூப்பர் ஸ்டார்,  பழம் பெரும் நடிகர் தியாகராஜ  பாகவதரின் 111வது பிறந்தநாள், நாமக்கல் மணிக்கூண்டு அருகில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, அவரது நற்பணி மன்ற தலைவர்  கோட்டை மணிவண்ணன், தியாகராஜ பாகவதரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை  செலுத்தினார். திருச்சியில் தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் மற்றும் முழு  உருவ வெண்கல சிலை அமைக்க சட்டசபையில் அறிவித்து, அதற்கான நிதி ஒதுக்கீடு  செய்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், துணைத்தலைவர்  நாகராஜன், அன்பு, சேகர், வக்கீல் மனோகரன், கந்தசாமி, மதியழகன், அண்ணா  துரை, குணசேகரன், செல்வராஜ், தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>