- உலக செவிலியர் தினம்
- மதுரை ஜி.எச்
- மதுரை
- மதுரை அரசு மருத்துவமனை
- தமிழ்நாடு செவிலியர் ஆசிரியர் சங்கம்
- துணை ஜனாதிபதி
- செல்வராஜன்
மதுரை, மே 13: மதுரை அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி தமிழ்நாடு செவிலிய ஆசிரியர்கள் சங்க துணை தலைவர் செல்வராஜன் தலைமையில் செவிலியர்கள், செவிலிய மாணவிகள் கலந்து கொண்டு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள புேளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் நோயாளிகளுக்கு சேவை செய்வதற்கான உறுதிமொழி அனைவராலும் ஏற்கப்பட்டது. விழாவில் செல்வராஜன் பேசுகையில், ‘மருத்துவ துறையில் செவிலியர்களின் பங்கு மிக முக்கியமானது. மனிதநேய சேவையை அடிப்படையாக கொண்டு செயல்பட்ட பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் சேவை மனப்பான்மை செவிலியர்களுக்கும் முன்மாதிரியாக திகழ்கிறது’ என்றார். இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை செவிலியர்கள், செவிலிய மாணவிகள், மருத்துவ பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
