மதுரை, மே 13: ஒன்றிய அரசின் நான்கு தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற கோரி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை நேற்று தொழிற்சங்கங்கள் இணைந்து நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை மண்டல போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாவட்ட செயலாளர் நந்தாசிங் மற்றும் பல்வேறு தொழிலற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், பொய் வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற வேண்டும், மாதம் ரூ.26 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், 8 மணிநேர வேலை வழங்க வேண்டும், மிகை நேரத்திற்கு இரட்டை ஊதியம் வழங்க வேண்டும், ஒப்பந்த முறையை ஒழித்து நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
