×

உத்திரபிரதேசம், ஹரியானா மாநில அரசுகளை கண்டித்து தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், மே 13: உத்திரபிரதேசம், ஹரியானா மாநில அரசுகளை கண்டித்து திருவாரூரில் நேற்று தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி, நொய்டா, கிரேட்டர் நொய்டா, மனேசர், குருகிராம் மற்றும் பரிதாபாத் உள்ளிட்ட நகரங்களில் போராட்டத்தில் உத்திரபிரதேசம் மற்றும் ஹரியானா காவல்துறையின் அத்து மீறலை உடனே தடுத்து நிறுத்த வேண்டும், போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைவரையும் நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்ய வேண்டும்,

தொழிலாளர் விரோத 4 சட்ட தொகுப்புகளை திரும்பப் பெறவேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தி சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் புதிய ரயில்வே நிலையம் முன்பாக சிஐடியு, எல்பிஎப், ஏஐடியுசி, ஐஎன்டியுசி ஆகிய மத்திய தொழிற்சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய தொழிற்சங்கத்தில் மாவட்ட தலைவர்கள் ஜோதிபாசு, தமிழரசன், குணசேகரன், அம்பிகாபதி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் அனிபா, ஏஐடியுசி மாவட்ட செயலாளர் சந்திரசேகரஆசாத், சிஐடியு மாநில குழு உறுப்பினர் மாலதி, மாவட்ட பொருளாளர் கஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

Tags : Trade unions ,Uttar Pradesh ,Haryana state governments ,Tiruvarur ,Uttar ,Pradesh ,Haryana ,governments ,Delhi ,Noida ,Greater Noida ,Manesar ,Gurugram ,Faridabad ,Haryana… ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...